புதன், 31 டிசம்பர், 2014

தோனி மாதிரி ஆகணும் !



முடிவு எடுப்பதில் யாருக்கெல்லாம் திறமை இருக்கோ , அவரெல்லாம் கொண்டாடப்படுவது காலம் காலமாக எழுதப்படாத விதி போல நிகழ்ந்து கொண்டே இருக்கிறது .அதே சமயம் அவர்கள் எடுத்த தவறான முடிவுகளும் அப்போது எதர்க்காக எந்த சூழலில் எடுத்தார்கள் என்பதை தவிர்த்து , இன்றளவும் விவாதிக்கப்பட்டு கண்ணாடி சில்லு போல சிதறி கூராய் குத்துகிறது .அது மஹாத்மா காந்தி பாகிஸ்தான் பிரிவினைக்கு சொன்னதானாலும் நீங்கள்  யாரையோ ஒரு பெண்ணை பார்த்து  எனக்கு காதலிக்க பிடிக்கிறது என்று தவறான முடிவாக இருந்தாலும் சரி எல்லாமே விடாமல் துரத்த தானே செய்கிறது .   


அந்த சிமெண்ட் கம்பெனி விளம்பரத்தில் ஒரு சின்ன பெண் தன்னுடைய சிரிக்கும் கண்ணை அகழலமாக் திறந்து கொண்டே சொல்லும் இந்த வார்த்தை எத்தனை பேருக்கு பிடிக்க வைக்குமோ தெரியாது ? ஆனால் அந்த பெண் சொல்லும் தோனியை எல்லோருக்கும் ஏன் கிரிக்கெட் பிடிக்காதவர்க்ளுக்கு கூடபிடிக்க வைத்து விட்டது காரணம் முடிவெடுப்பது அதுவும் இக்கட்டான நேரத்தில் ...
       
     டெஸ்ட் போட்டியில் தோனி ஓய்வு பற்றி எடுத்து முடிவு விவாதத்தில் இருப்பதால் தோனியை நாம் தலைப்புக்கு மட்டும் எடுத்து விட்டு நம்ம சொந்த ஆட்டத்து,  முடிவை பற்றி பேசலாமே !  


          நம்ம விசயத்தில் நாம் முடிவெடுக்க தயங்குவதர்க்கு காரணம் விளைவின் மேல் உள்ள ஆசை .தப்பா போய் விடகூடாது எனபதில் உள்ள அக்கறை .நாம் ஓரமா உட்கார்ந்து கொண்டு பலனை மட்டும் அநுபவிக்க விரும்பவது இப்படி கூட காரணமாக இருக்கலாம்  இப்படி  சொல்லிகொண்டே நழுவி கொண்டேயும்  போகலாம்..


  எனக்கு தெரிந்து யாராவது நல்லா இருக்குன்னு சொல்ற சட்டையத்தான் பலர் அதிகம் தடவை போடுவோம் .இதுல வீட்ல பசங்க இன்னும் கொஞ்சம் மேல போயி ஏதாவது வெவரம் தெரிஞ்ச உடனே முதல்ல சொல்றது , எங்க அப்பா அம்மாவுக்கு எதுவுமே தெரியறதே இல்லைன்னு சொல்றதுதான்.அதுல சில சமயம் உண்மை இல்லாம போறதும் இல்லை .அவனுகளுக்கு வயசாகிறபோது அவனோடஎதிர்காலத்துக்காகன்னு சொல்லிட்டு ! நாம் காசை தேடி ஓடிகொண்டு இருப்போம் அவன் வயசை அநுபவிக்க ஓடிக் கொண்டு இருப்பான் நமக்கு அவனுக்கும்  மிஸ் மேட்ச்தான் ஆரம்பிக்கும்.


நம்ம பழைய நடிகை அமலாவை பலருக்கு தெரியும். ( அதான் நாகார்ஜூனாவை கட்டிக்கிட்டாங்களே அவங்கதான் .) அவங்க திருமணம் மணமுறிவு - டைவர்ஸ் ஏற்பட்ட போது இனி என்ன செய்ய போறீங்க என்ற ஒரு பத்திரிக்கையாளர் கேள்விக்கு அவ்ங்க சொன்ன பதில் - எனக்கு வாழ்க்கையில் முடிவு எடுப்பதை பற்றி என அம்மா சொல்லி தந்து இருக்கிறார்க்ள் அதனால் என்னால் வாழ்வை சந்திக்க முடியும் என்றார்கள் .   ( அப்புறம் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விசயம் ! )
  


பொதுவா மற்றவர்க விசயத்தில் முடிவெடுப்பதில் பலரும் இங்கு ஆகாய சூரர்கள்தான் ஆனால் தனக்கு முடிவு எடுப்பதில் முகத்தை திருப்பிகொள்வார்கள் .நம் விசயத்தில் யாரோ எப்போதோ எடுத்த முடிவுகளை உரக்க பேசி சாபத்தை அநுபவிப்பது போல  சிலாகிப்பவர்கள் தன்னுடைய மனைவி குழந்தைகள் விசயத்தில் தயங்கினாலும் பரவாயில்லை அடுத்தவர் முடிவை அலசி ஆராய்வதில் ’டைம்ஸ் ஆஃப் நவ்’ அர்னாப் கோஸ்வாமியை (Arnab Goswami ) விட வல்லவர்கள் !



  சிலர் சந்தேகம் கேட்டே கடைசி வரை எந்த முடிவும் எடுப்பதில்லை.இதில் சிலருக்கு எந்த கடவுளை எப்படி கும்பிடுவதில் ஆரம்பிக்கிறது  .கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொடி கம்பத்தின் முன்னால் விழுந்து வணங்குவதா  கடவுள் தரிசனம் முடித்து விட்டு விழுந்து கும்பிடுவதா ? வாங்கிய கோவில் பிரசாதத்தை இடது கை மாற்றி கொண்டால் தப்பாமே என்று கூட சந்தேகம் ! எரிப்பமா புதைப்பமா ? சனி பெயர்ச்சியில் குளத்தில் குளித்து விட்டு எந்த ட்ரெஸ்சை விட்டுட்டு வரது ? யோகாசனம் நல்லதா , ஜிம்முக்கு போலாமா ? இன்னும் நிறைய ...


தவறான முடிவெடுப்பதால் எடுக்கும் முரண்பாடுகளுக்கு   கோழைகளுக்கு மட்டும் சொந்தம் என்பது ஒரு காலத்துல சந்தோசமா சொல்லிட்டு தப்பிச்சுட்டோம் . ஆனா இப்பெல்லாம் அடுத்தவன் தனது  முடிவுகளை எடுக்க விடாமல் தடுத்து , எப்படி நாம் வாழலாம்ன்னு அலையற -  வியாபார உலகத்து முகமூடிக்குள்ள இருக்கோம் . நம்மளோட சுயம்  சிக்கி பிழியப்படுதேன்னு  நமக்கே  நல்லா தெரியுது. மண்ணெண்னை வாங்கறதுல  ஆரம்பித்து பெண் பார்க்கறவரை  கூட விளம்பரம்தான் வழி நடத்துகிறது.இதுவரை சுயம் என்பது பூஜ்யம்தான் .ஆனால் அது 2014 வரைதான்னு ஒரு முடிவு  எடுப்போம் 


         அதுநாள , இந்த புத்தாண்டுக்கு உங்களோடு கை கோர்த்துகொண்டு நானும் செய்ய போவது -  எல்லா விசயத்துல இந்த 2015 ங்கிற  ஜன்மத்துலயாவது சொந்தமா  சரியான முடிவு எடுக்கலாம்ன்னு  யோசிக்கலாம் .